தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை தமன்னா மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து நவராத்திரி விழா கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடன் பாஜக எம்பி மனோஜ் கோடக்கும் உடன் இருந்தார். இதையடுத்து தமன்னா பாஜகவில் இணையவுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. சமீபத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது தமன்னாவும் இணையப்போவதாக கூறப்படுகிறது.