Categories
மாநில செய்திகள்

“நான் குதிக்கணும்”…. ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய குடிமகன் செய்த அட்டகாசம்…. பெரும் பரபரப்பு….!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆற்றின் பாலத்தின் மீது தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கக்கூடிய வகையில் தன்னம்பிக்கை கொண்ட வாசகங்கள் கொண்டு விழிப்புணர்வு பாதகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த பள்ளிப்பாளையம் தேவாங்குபுற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட முயன்றார்.

அப்போது அங்கிருந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற நபரை பிடித்து கீழே இறக்கி பொதுமக்கள் காவல்துறை உதவியுடன் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்க முற்பட்டனர். இருப்பினும் அதை உணராத கூலித் தொழிலாளி ராஜா தன்னை தற்கொலை செய்து கொள்ள வழிவிடுமாறு தொடர்ந்து காவல் துறையினரை வலியுறுத்தினார். அதன் பிறகு அவரது இரு சக்கர வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு சென்ற போலீசார் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் சமாதானம் செய்து வைத்து திரும்பி சென்றனர். தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சமூகப் பொறுப்புடன் காவல்துறையினர் பாலத்தின் மீது விழிப்புணர்வு பாதகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |