தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அடுத்தடுத்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்பு பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 744 பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து மட்டும் இரண்டு நாட்களில் 3500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டது.
அதில் 2.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல பிற ஊர்களில் இருந்தும் 1650 சிறப்பு பெயர்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. நாளை வேலை நாள் என்பதாலும், காலாண்டு விடுமுறை முடிந்து வருகின்ற 10 ஆம் தேதி பள்ளிகளில் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்பதாலும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழக சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படி 2,100 பேருந்துக்களுடன் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு கூடுதலாக 1150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.