தசராவை முன்னிட்டு நாகப்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டமும், மத சார்ந்த சமமற்ற நிலையை தடுத்து கட்டாய மதமாற்றத்தை தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும். அதனைத் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வளங்களும் தேவை. வளங்களை பெருக்கும் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் தொகை அதிகரிப்பதை அனுமதித்தால், அது சுமையாக மட்டுமே உருவாகும்.
ஆனால் அதே நேரத்தில் மக்கள் தொகை மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகிறது. மக்கள் தொகை கொள்கையை வகுத்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதனையடுத்து மக்கள் ஏற்றத்தாழ்வு பூகோல ரீதியாகவும் எல்லை பிரச்சினைகளை உருவாக்கும். இவை தவிர கட்டாய மதமாற்றமும் ஊடுருவலும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. எதிர்காலத்திற்கு ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை மாணவர்களை பண்பட்டவர்களாக, தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல மனிதர்களாக மாற்ற வேண்டும். அனைவரின் விருப்பம். இதற்கு சமூகம் ஆதரவளிக்க வேண்டும். மேலும் கோயில், தண்ணீர், சுடுகாடு அனைவருக்கும் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். அற்ப விஷயங்களுக்காக நாம் சண்டையிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.