விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புண்ணிய காரியங்களில் மனம் ஈடுபடும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தெளித்து இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள், அது போதும். தனவரவில் எந்தவித மாற்றங்களும் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.
உறவினர்களிடமிருந்து அன்பு இருக்கும். உறவினர்களிடமிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்றையநாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் கொஞ்சம் அமைதியாகவே இருக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் ஓரளவு மகிழ்ச்சியை கொடுக்கும். பழைய கடன்கள் அடைபடும். பழைய பாக்கிகளும் இன்று வந்து சேரும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும். திருமண முயற்சியும் நல்லபடியாகவே நடந்து முடியும்.
சுபகாரியப் பேச்சுக்கள் ரொம்ப சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். கூடுமானவரை திருமணமாகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் நடத்துங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்