பிரபல நடிகை தனது நீண்ட நாள் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான ஹீனா கான் முதலில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்செயலாக பாலிவுட் பக்கம் திரும்பினார் இவர் தற்பொழுது பாலிமர் திரையுலகுக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. சென்ற 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை வேடத்தில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பொழுது தனது நீண்ட கால விருப்பம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, நான் நடிகையாக வேண்டும் என நினைத்ததில்லை. பத்திரிகையாளராக வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் விருப்பமாகும். பத்திரிக்கையாளர் பர்கா டுட்டால் நான் அதிகம் ஈர்க்கபட்டிருக்கின்றேன். அவரின் செய்தி வழங்கும் தன்மைக்கு நான் மிகப்பெரிய ரசிகை. ஆனால் விதி வேறு திட்டம் வைத்திருந்தது. டெல்லியில் நடிப்பு தேர்வுக்கான ஆடிசன் நடைபெற்ற பொழுது எனது நண்பர்களின் வற்புறுத்தலால் கலந்து கொண்டு முதல் சுற்றில் தேர்ச்சி அடைந்து மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அனைத்து சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றதால் நடிகையாகும் சூழ்நிலை ஏற்பட்டது. முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு அதுவே பழகிவிட்டது. இப்படிதான் நான் நடிகையாக மாறினேன். ஆனால் பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு என குறிப்பிட்டு இருக்கின்றார்.