பிலிப்பைன்ஸ் நாட்டில் காகயன் மாகாணத்தில் ரஷித் மங்காகோப் என்பவர் வசித்து வருகிறார். 78 வயதுடைய அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளது. இந்நிலையில் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து பேசிய ரஷித் மங்காகோபின் மருமகன் பென் மங்காகோப் கூறியது, இது உறவினர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்ல, காதல் திருமணம். இருவரும் காதலித்ததால் தற்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டப்படி 21 வயது பூர்த்தி ஆவதற்கு முன்பே பெற்றோரின் அனுமதி இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.