பிரபல நாட்டில் இந்தியர்களின் பல ஆண்டு கனவுகளை நிறைவேற்றும் வகையில் இந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள பழமை வாய்ந்த ஒரு இந்து கோவிலை புதுப்பிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பணிகள் முடிந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதனை அந்நாடு அரசின் சகிப்புத்தன்மைத்துறை மந்திரி திறந்து வைத்தார். இதனால் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் 16 தெய்வங்கள் உள்ளது. அனைத்து மதத்தினர் வழிபாடு நடத்தவும், பிற பார்வையாளர்களுக்கு எங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவிலை பளிங்குக் கற்களால் கட்டியுள்ளனர். இதனையடுத்து தூண்கள் மற்றும் முகப்பு பகுதி அரபு மற்றும் இந்து முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் பிற வழிபாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர் நுழைவதற்கு அனுமதி அளித்துள்ளது. தினமும் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வரை இங்கு வழிபாடு செய்யலாம். இதனையடுத்து காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கோவில் திறந்திருக்கும். மேலும் கூட்ட நெரிச்லை தவிர்ப்பதற்காக கோவில் நிர்வாகம் கியூ ஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.