இடுக்கி மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் சிகாப்த் என்ற காவலர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி அருகே யாரும் இருக்கின்றனரா என தேடுகிறார். இதையடுத்து கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து 600 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மாம்பழத்தை திருடி தனது ஸ்கூட்டரில் போடும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாம்பழம் திருடிய வழக்கில் காவலரை பணியிடை நீக்கம்செய்து கேரள காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் ஹெல்மெட் மற்றும் ரெயின் கோட் அணிந்து இருந்ததால், அந்நபரை போலீசாரால் முதலில் அடையாளம் காண முடியவில்லை. எனினும் வாகன எண் வாயிலாக விசாரணை மேற்கொண்டபோது காவலர் சிகாப்த் என தெரியவந்தது.