கூகுள் நிறுவனமானது, சீன நாட்டில் பல சேவைகளை நிறுத்திக் கொண்டிருந்த நிலையில் மொழிபெயர்ப்பு சேவையை தற்போது நிறுத்தியிருக்கிறது.
கூகுள் நிறுவனமானது, உலக நாடுகலில் பல்வேறு சேவைகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுடைய சீன நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியுள்ளது. இது, அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டிருக்கிறது.
அதாவது கூகுள் நிறுவனத்தினுடைய சேவைகள் ஹேக் செய்யப்படுவது, சீன நாட்டில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், கூகுள் வழங்கும் சேவைகளை காட்டிலும் மிகச் சிறந்த சேவைகளை அளிப்பது போன்றவற்றால் கூகுள் நிறுவனம் தன் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, தான் கடந்த 2017 ஆம் வருடத்தில் அந்நாட்டில் கூகுள் நிறுவனம் துவங்கிய மொழிபெயர்ப்பு சேவையை தற்போது முடித்துக்கொண்டது.