EPFO அமைப்பானது ஊழியர்களுடைய பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுடைய பணிக்காலத்தில் ஊதியத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை கொடுக்கிறது. ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், அதே அளவிற்கு ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் ஊழியரின் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இந்த பிஎஃப் பணத்திற்கு வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊழியருக்கு அதிகபட்சமாக ஓய்வூதியமாக 15000 கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிஎஃப் பயனளர்கள் தொடர்ந்து பலமுறை தங்களின் ஓய்வூதிய பலன்களை உயர்த்துமாறு கோரிக்கை வைத்து வந்த நிலையில் இதை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது உச்ச நீதிமன்ற பரிந்துரையின் படி ஓய்வூதியர்கள் தங்களுடைய ஓய்வூதியத்தில் 300 சதவீதம் அதிகமாக பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 20 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களுடைய பணி காலத்தில் இரண்டு வருட கூடுதல் வெயிட்டெஜ் பெறுவார்கள் என்றும் இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி பயனளர்கள் பயனடைவார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.