Categories
சினிமா தமிழ் சினிமா

ஒருபோதும் தவறில்லாத ஒரு பிரேம்….. “ரஜினியின் லேட்டஸ்ட் போட்டோவை பகிர்ந்த ஐஸ்வர்யா”…. அந்த ஒரு கேள்வி கேட்ட நெட்டிசன்….!!!!!

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் இருக்கின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை மகள் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினி செல்போனில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அந்த போட்டடோவை ஐஸ்வர்யா பகிர்ந்து பில்டரே தேவையில்லை. பொய் எதுவும் இல்லை. குறை இல்லாதது… ஒரு போதும் தவறு இல்லாத ஒரு பிரேம்…. ஒரு போதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். தந்தை அன்பே.. நேர்மறையான விலைமதிப்பற்ற பர்பெக்ட் புகைப்படம். உங்கள் எல்லா நாட்களும் மேற்சொன்னபடியே இருக்கும் என நம்புகின்றேன். அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள் எனக் கூறி iphone 14promax என குறிப்பிட்டு இருக்கின்றார்.

ஐஸ்வர்யாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் ஸ்டைலை புகழ்ந்து வருகின்றார்கள். இது ஒரு பக்கம் இருக்க சில நெட்டிசன்கள் iphone 14promax-க்கு விளம்பரமா எனக் கேட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |