பிரபல தொழிலதிபருக்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ஒரு மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்துள்ளது . அப்போது பேசிய ஒருவர் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை மத்திய அரசு இசட் பிளஸ் வகைக்கு மேம்படுத்திய சில தினங்களுக்குப் பிறகு இந்த மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.