Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட தாய் மற்றும் மகள்….. கடுப்பான வாலிபர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

மனைவி மற்றும் மகளை கொலை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் ரிக்க்ஷா ஓட்டுநரான சஞ்சய் பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், தாஷி  என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேகா, தாஷி  ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராமில் தங்களது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கேலி செய்து வந்துள்ளனர். இதனால் சஞ்சய் பாலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் கடந்த வியாழன்கிழமையும்  கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த சஞ்சய் பால்  மண்வெட்டியால் மனைவி மற்றும் மகளை வெட்டி கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சஞ்சய் பாலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |