Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி….. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தம்பதி தனது 4 வயது மகனுடன் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் காவுத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் சம்பத், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பத் கூறியதாவது, எனக்கு பாத்தியப்பட்ட ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, மசால் புல் நடவு செய்து வருகிறேன். வழிப்பாதை தொடர்பாக எனக்கும், பக்கத்து தோட்டத்துக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அவர் அடிக்கடி எனது நிலத்திற்குள் வந்து செல்வதால் கண்காணிப்பு கேமராவை பொருத்தினேன். கடந்த மாதம் 27-ஆம் தேதி சிலர் கம்பி வேலியை சேதப்படுத்தி கேமராவை உடைத்து சென்றதோடு, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது தோட்டத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |