பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள நபர், பிரபல தொலைக்காட்சியில் பேட்டி.
Valentine Low என்னும் அந்த எழுத்தாளர் தனது புத்தகம் குறித்து விளக்கும்போது, ஹரியின் மனைவி மேகனுடைய தொல்லைகளுக்குத் தப்பி சமாளித்த ஒரு கூட்டம் அரண்மனையில் இருக்கின்றது என்பது போன்ற ஒரு விடயம் விவாதத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தங்கள் வீடுகளிலிருந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு மேகனை விமர்சித்தது பிடிக்கவில்லை என்பது இணையத்தில் வெளியான கருத்துக்களிலிருந்து தெரியவந்துள்ளது. டுவிட்டரில் ஏராளமானோர் ஹரி மேகன் தம்பதியருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து மக்கள் கூறியதாவது, “ஹரி மேகனை தொல்லை செய்யாதீர்கள், அவர்களுக்கு இந்த தொல்லைகள் எல்லாம் வேண்டாம் என்று தான் அவ்வளவு தூரம் போயிருக்கின்றார்கள். வதந்திகளை வைத்து ஒருவர் புத்தகம் எழுதியிருக்கின்றாராம். வெறும் கிசுகிசுக்களை வைத்து ஒருவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார். உலகத்தில் வேறு விடயங்களே இல்லையா, இதைப்போய் காலை செய்திகளில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்களே. 2 -ம் எலிசபெத் என்னும் பெயரில் எழுதும் ஒருவர், உண்மையில் அரண்மனையில் என்ன நடக்கின்றது என்பது யாருக்குமே தெரியாது, வதந்திகளை வைத்து புத்தகம் எழுதாதீர்கள். மேலும் புரளிகளை வைத்து ஒருவர் புத்தகம் ஒன்று எழுதி அதை எப்படியாவது விற்கப் பார்க்கின்றார். மேகனை தனியாக விடுங்கள், அவரை வேண்டுமென்றே வில்லியாகக் காட்ட நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்கிறீர்கள்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.