தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (அக்7) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களான விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உள்ளிட்டவைகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
இதனால் விளாத்திகுளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
மேலும் சூரங்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் இடங்களில் மின்தடை செய்யப்படும் என தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் கூறியுள்ளார்.