Categories
தேசிய செய்திகள்

தவறான Bank account-க்கு பணம் அனுப்பிவிட்டால்….. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

நாம் ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்யும் பொழுது தவறான வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த நேரிடலாம். சில சமயம் வங்கி மோசடியிலும் இதுபோன்று நடக்கலாம். இந்த சமயத்தில் நமக்கான தொகையை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். ரிசர்வ் வங்கியில் புதிய வழிகாட்டுதலின்படி உங்களுடைய பணத்தை 48 மணி நேரத்திற்குள் திருப்பி செலுத்துவது வங்கியின் பொறுப்பாகும். அப்படி வங்கி திரும்ப பெற உதவவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர் bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் பணத்தை மாற்றி அனுப்பியவரின் வங்கி கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், பரிவர்த்தனை குறிப்பு எண், பரிவர்த்தனை தேதி, தொகை, ஐஎஃப்எஸ்சி குறியீடு ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு தகவல்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கப்பட்டு உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்.

Categories

Tech |