Categories
மாநில செய்திகள்

2,748 காலிப்பணியிடம்… உடனே அப்ளை பண்ணுங்க….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்ய வேண்டும். விண்ணப்பம் அளிக்க நவம்பர் 7ஆம் தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிக்க நவம்பர் 14ஆம் தேதி இறுதி நாளாகவும் நிர்ணயிக்க வேண்டும்.நவம்பர் 30ஆம் தேதி எழுத்து தேர்வு மற்றும் டிசம்பர் 15 , 16 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 7ஆம் தேதி வரை பெற வேண்டும்.

சம்பளம் ரூ.11,100 – ரூ.35,100  வரை  வழங்கப்படும்.

தமிழில் படிக்கவும் எழுதவும் வேண்டும்

5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

 

Categories

Tech |