ஜஸ்டின் பிரபாகரன் மதுரையில் பிறந்தவர். மதுரையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இவரது தந்தை வேலை பார்த்து வரும்போது தேவாலயத்தில் இருக்கும் இசைக்கருவிகளை இவர் ஆவலாக இசைத்து பார்க்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் இசைப்பதை கவனித்து சந்தேகம் கேட்டு தெளிந்து கீபோர்ட், கிட்டார் போன்ற வெவ்வேறு இசை கருவிகளை தானாக பயின்றுள்ளார். இசை கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டுள்ளார் ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக முடியவில்லை. அதனால் மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படிப்பில் சேர்ந்துள்ளார்.
அதன் பின் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து லிவிங் பார்சல் இசை பான்டை ஆரம்பித்துள்ளார். அதன் பின் பிரபல தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் 2004 இல் சொந்த பாடல்களை பாண்டுடன் நேசித்த போது பாராட்டும் பரிசும் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்- கரோலின் சூசன்னா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மதுரையில் வைத்து நடைபெற்றுள்ளது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரையில் நேற்று காலை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, சாந்தனு, பாக்கியராஜ், கலையரசன், காளி வெங்கட், பாலசரவணன், ஆதித்யா, கதிர், இயக்குனர்கள் பா ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், ஆதிரை, பிராங்கிளின் ஜேக்கப், ஷான் பரத் கம்மா, விவேக் சோனி, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, பின்னணி பாடகர் கிருஷ் அந்தோணி தாசன் பாடலாசிரியர் மதன் கார்க்கி போன்ற பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.