இந்தியாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக வலம் ஒருவர் மணிரத்தினம். இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். அந்த முயற்சிக்கெல்லாம் தற்போது பலன் கிடைத்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகிய மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களை இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியர்கள் எதிர்பார்த்த இப்படத்தை லைக்கா நிறுவனமும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தின் அசுர வெற்றியால் இந்த வாரம் வெளியாகும் படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை கடந்த ஐந்து நாட்களில் ரூ.250 கோடிக்கு மேல் பொன்னியின் செல்வன் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்தினத்தின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மணிரத்தினம் இப்படத்திற்காக சம்பளமாக எந்த தொகையும் வாங்கவில்லை. படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதிதான் சம்பளமாக வாங்கப் போவதாக முடிவு எடுத்தாராம். எனவே மிகப் பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கிய மணிரத்தினம் சம்பளமாக ஒரு தொகை பேசாமல் வேலை செய்தது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உண்டாக்கி உள்ளது.