சபரி மலை அய்யப்பன் கோயிலில் ஐப்பசி மாதம் பூஜைக்காக வரும் 17ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றிவைத்து தீபாராதனை நடத்துவார். இதையடுத்து 22ஆம் தேதி வரை 5 தினங்கள் சிறப்புபூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
வழக்கம்போல ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யக்கூடிய அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்கேற்ப தரிசன முன் பதிவுக்கான ஏற்பாடுகளானது செய்யப்பட்டிருக்கிறது. கேரள அரசின் உத்தரவை அடுத்து பக்தர்கள் முகக்கவசம் அணிந்துவர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.