இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜஸ்டின் பிரபாகரன். இவர் ஒரு நாள் கூத்து, பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
இதனயடுத்து, ஜஸ்டின் பிரபாகரன் கரோலின் சூசன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.