சுற்றுலா பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் பாசலியஸ் வித்யா நிகேதன் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலா பேருந்தில் ஆலத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து சுற்றுலா பேருந்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்து விதத்தில் படுகாயம் அடைந்த 9 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பேருந்துக்குள் சிக்கி இருந்த மாணவர்கள் உள்ளிட்ட 45 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.