உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையற்ற பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் என 41 பேரை கொண்ட குழு ஒன்று அந்த மாவட்டத்தில் உள்ள திரௌபதி மலையில் மலையற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த மலையின் கா தண்டா இரண்டு சிகரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடியில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு பணிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக் கொண்டிருந்த இக்குழுவினர் பணி சரிவில் சிக்கிக்கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்தோ ன-திபெத் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 29 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 48 மணி நேரம் கடந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 16,000 அடி உயரத்தில் ராணுவ ஹெலிகாப்டரை தரை இறங்குவதற்காக பணிகள் நடைபெற்ற நிலையில் இன்று காலை சோதனை தரையிறக்கம் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய ராணுவத்தின் மலையேற்ற பயிற்சி பெற்ற வீரர்கள் 16000அடி உயரத்தில் தேடுதல் பணியில் ஈடுபடுவதற்காக ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு பனிச்சரிவு மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலையேற்ற பயிற்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.