Categories
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் 3000 டன் தங்கப் படிமங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை : ஆய்வு நிறுவனம் மறுப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பதாக வெளியான தகவலை இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சோன்பத்ராவில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சர்வதேச அளவில் அதிகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு வரும் எனவும் தகவல் வெளியானது. மேலும் பொருளாதார மந்த நிலை சரிசெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பதாக வெளியான தகவலை இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், மாவட்ட சுரங்க அதிகாரிகள் சொன்னது போல உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் 3000 டன் அளவுக்கெல்லாம் தங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பேசிய, இந்திய நிலவியல் ஆய்வு நிறுவன இயக்குநர் ஸ்ரீதர், உ.பி. மாநிலத்தில் கடந்த 1998-99 மற்றும் 1999- 2000 ஆண்டுகளில் தங்க படிமங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டோம். அப்படி அங்கு தங்கப் படிமங்கள் இருப்பதாக தெரியவந்தால் அதுகுறித்து மாநில அரசுகளிடம் தெரிவிப்போம்.

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து அந்த மாநில சுரங்கத் துறைக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு தங்கம் இருப்பதாக சாதகமான சூழலி நிலவவில்லை என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அங்கு இருக்கும் படிமங்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்தால் மொத்தமே 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |