தமிழகத்தில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது கல்வி,வேளாண்மை மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் உள்ளன, திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகின்றதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த சிறப்பு திட்ட செயலாளருக்கு துறையின் கீழ் திட்டங்களுடைய செயல்பாடுகள் மற்றும் தரவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். அதாவது ஒவ்வொரு மாதத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் உரிய பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்தும் திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.