Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மற்றொரு சலுகை…. அனைவருக்கும் மானிய கடன்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் பணம் 3 தவணைகளாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்த பன்னிரண்டாவது தவணையை பெறுவதற்கு முன்பே அரசாங்கம் விவசாயிகளுக்கு மற்றொரு வசதியை வழங்குகின்றது.

இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு கிசான் கிரெடிட் கார்டு வசதியை வழங்குகின்றது. இதன் மூலம் விவசாயிகள் எந்த தொழிலையும் தொடங்க முடியும்.விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த வசதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கு அருகில் உள்ள வங்கிக்கிளைக்கு  சென்று விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்களை வைத்துக் கொண்டு விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு வழங்க வேண்டும். இதற்கு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படும்

Categories

Tech |