Categories
உலக செய்திகள்

சூப்பர்….! இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின்…. முடிச்சுட்டு விழா அறிவிப்பு….!!

இங்கிலாந்து நாட்டில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த  2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகின்றார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார்.

இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகின. மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு 74 வயதாகின்றது. இதன்மூலம், இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனை அடுத்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார். இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

இதனை தொடர்ந்து பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பின்பு தான் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படுவார்கள். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியிலிருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மகாராணி 2 -ம் எலிசபெத் 1953 இல் முடிசூட்டப்பட்டபோது, 129 நாடுகளைச் சேர்ந்த 8,000 விருந்தினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு பயணம் செய்துள்ளனர். ஆனால் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் என்று தெரிகின்றது.

 

Categories

Tech |