Categories
தேசிய செய்திகள்

“பேச்சுவார்த்தை எல்லாம் இல்ல ஒரு கை பார்ப்போம்”…. அமித் ஷா திட்டவட்டம்….!!!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று  ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அதன்பிறகு இன்று பாரமுல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 1947 ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலும் ஆட்சி செய்தது அப்துல்லா குடும்பம், முப்தி குடும்பம், காந்தி நேரு குடும்பம் என்னும் மூன்று குடும்பங்கள் தான். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கு இந்த மூன்று குடும்பங்கள் தான் காரணம். ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களால் 1990 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 42,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த தீவிரவாதத்தால் ஜம்மு காஷ்மீருக்கு ஏதாவது பயன் கிடைக்கிறதா?.

அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் மக்களிடம் தான் பேசுவோம். தீவிரவாதத்தை நரேந்திர மோடி அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஜம்மு காஷ்மீர் தீவிரவாதம் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்தியாவின் மிக அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். இதனையடுத்து இங்குள்ள சில அரசியல்வாதிகள் பாகிஸ்தான் குறித்து பேசுகிறார்கள். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது என்பதை நாங்கள் அவர்களிடம் கேட்க விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் கிடைப்பதை கடந்த மூன்று ஆண்டுகள் நாங்கள் உறுதி செய்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |