Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு தண்டனையா!…. “பர்கர்” வாங்கி தர குற்றவாளிக்கு நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

டெல்லியில் வசிக்க பெண் ஒருவர் தனது முன்னாள் கணவர் தன்னை பாலில் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் தன்னை பின் தொடர்வதாகவும் வமிரட்டி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்றால் இரண்டு அனாதை இல்லங்களுக்கு அதாவது குறைந்தது 100 குழந்தைகளுக்கு நல்ல சுகாதார முறையில் பர்கர் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட முன்னாள் மனைவிக்கு ரூ.4.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவதற்கு முடிவு செய்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் நீதிமன்றத்தின் நேரத்தையும், காவல்துறை நேரத்தில் மனுதாரர் வீணடித்ததாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் புகார் கொடுத்த பெண்மணி வழக்கை திரும்ப பெறுவதில் எந்தவித ஆட்சேபனை இல்லை என்று கூறியதால் தான் நீதிமன்றம் அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |