சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் கரும்பு சீசனில் சாதனை அளவாக 5000 மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக கரும்பு உற்பத்தியாகி இருக்கிறது. அதன் மூலம் சர்க்கரை உற்பத்தியில் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதனை போல சர்க்கரை ஏற்றுமதில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அதனை தொடர்ந்து சர்க்கரை ஆலைகள் மூலம் 359 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.35 லட்சம் மெட்ரிக் டன், எத்தனால் தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போதிய பருவமழை இருந்ததால் இந்த பருவ காலம் சர்க்கரை உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்தது. இதனையடுத்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையில் 109 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதியின் மூலம் ரூ.40,000 கோடி அந்நிய செலவாணி ஈட்டப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச ஆதரவு விலையும், மத்திய அரசின் கொள்கையை சர்க்கரை துறைக்கு வளர்ச்சியை தந்துள்ளது. மத்திய, மாநில, அரசுகள் விவசாயிகள் சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.