Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கைக்குட்டையை எடுக்க சென்ற மாணவன்…. தாய் கண்முன்னே பலியான சம்பவம்…. கோர விபத்து…!!!

தாய் கண்முன்னேயே பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பண்ணந்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதுர்வேதி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாயுடன் ஸ்கூட்டரில் தர்மபுரிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது மாணவனின் கைகுட்டை சாலையில் விழுந்தது.

இதனால் தனது தாயை சாலையோரம் இறக்கிவிட்டு மாணவன் கைக்குட்டையை எடுப்பதற்காக ஸ்கூட்டரில் சென்ற போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |