தமிழகத்தில் உள்ள 8 மருத்துவக் கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அமைந்துள்ள 8 அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி 8 முதல்வர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேருக்கு பதவி உயர்வு அடிப்படையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
1.சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் சிகிச்சை இயக்குனராக இருந்த டாக்டர். கே.நாராயணசாமி தற்போது செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர்.ஜி. செந்தில்குமார் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர் எஸ். சீனிவாசன் தற்போது கரூர் மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.சென்னை மருத்துவக் கல்லூரியில் உடல் இயங்கியல்த்துறை இயக்குனராக இருந்த டாக்டர் சி.திருப்பதி தற்போது கடலூர் மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் ஜி.ஆர். ராஜஸ்ரீ தற்போது திண்டுக்கல் மருத்துவ கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6.திருச்சி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர் ஜி. சிவக்குமார் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7.சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ கல்வி சிறப்பு இயக்குனராக இருந்த டாக்டர் ஏ.எல். மீனாட்சிசுந்தரம் தற்போது தேனி மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8.தேனி மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த ஆர்.பாலாஜி நாதன் தற்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.