Categories
பல்சுவை

ஐயோ!…. இனி வாட்ஸ் அப்பில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாதா?…. ஷாக்கில் பயனாளர்கள்….!!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிகம் விரும்பப்படும் வாட்ஸ்அப் தனது பயனர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பல புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது எனப்படும் ஒருமுறை மட்டுமே பார்க்கும் புகைப்படம் அல்லது தகவல்களை ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்க முடியாது வகையில் புதிய மாற்றம் பரிசோதனையில் உள்ளது. இது குறித்து whatsapp பீட்டா வெளியிட்டிருக்கும் பதிவில், ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாமல் செய்திருப்பதற்கு நன்றி. வியூ ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் வீடியோ அல்லது புகைப்படங்களை இனி பயனர்கள் யாரும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் மாற்றம் விரைவில் வருகிறது. இறுதியாக வாட்ஸ் அப் வியூ ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் அல்லது வீடியோக்களை ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்ய முடியாமல் பாதுகாக்கும் வசதியை உருவாகிவிட்டது. இது தற்போது சோதனையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து whatsappபில் நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதமே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. விரைவில் நாம் ஆன்லைனில் இருப்பதை யாராலும் அறிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளக் கூடாது என்பதை கூட முடிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், நிரந்தரமாக புகைப்படம் அல்லது வீடியோ இருக்கக்கூடாது என்றால் வியு ஒன்ஸ் என்ற வசதி மிகச் சிறப்பாக பொருந்தும். அதேபோல வியு ஒன்ஸ் தகவல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாமல் செய்வது அதற்கான கூடுதல் பாதுகாப்பு என்று பதிவிட்டு இருந்தார். இது குறித்து ஒரு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வியு ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் புகைப்படம் அல்லது வீடியோவை யாருக்கும் அனுப்பவும் சேமிக்கவும் முடியாது. ஆனால் பெறுநர் அதனை மற்றொரு செல்லிட பேசிக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எனவே அனுப்பும் போது கவனம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |