சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆதரவற்ற முதியவர்கள் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை செய்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் ஆதரவற்ற முதியவர்களை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யபட்ட சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ய தொடங்கினர்.
கொலை தொடர்பாக சிக்கிய CCTV பதிவின் சந்தேகத்தின் பேரில் போலீசார் இளைஞர் ஒருவனை கைது செய்தனர். கைது செய்யபட்ட அவன் மனநலம் பாதிக்கப்பட்டது போன்று நடந்து கொண்டதால் போலீசார் குழப்பியுள்ளனர்.
இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளில் இருந்த இளைஞரின் அடையாளங்களையும் போலீசாரிடம் சிக்கிய இளைஞரின் புகைப்படங்களையும் பெங்களூரில் உள்ள தடவியல் பிரிவில் ஒப்பிட்டுப் பார்க்க அனுப்பப்பட்டது.
அந்த சைக்கோ நபர் ஒருவரே என்பது உறுதியானதை அடுத்து அவரை அந்த கொலைகளையும் செய்தவர் என்று முடிவுக்கு வந்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் திண்டுக்கல்மாவட்டம் சித்தேரி ஊரைச் சேர்ந்த 21 வயது ஆண்டிச்சாமி என்பது தெரியவந்தது.
மேலும் ஆண்டிச்சாமி கஞ்சாவுக்கு அடிமையானதால் குடும்பத்தினரால் மீட்க இயலாமல் துரத்தி விடப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. கஞ்சா வாங்குவதற்கு காசு தேவை பட்டதால் இந்த கொலைகளை செய்து வந்தது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில் அவனை கைது செய்த போலீசார் போதைமறுவாழ்வு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.