இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 35 முதல் 75 சதவிகிதம் வரை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்காக மத்திய மீட்பு படையினர் 2,048 பேர் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில், “பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்கள், சுற்றுச்சுவர்களை அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கவும், மின் இணைப்பு சரியாக உள்ளதை உறுதிப்படுத்தவும், திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டிகளை மூட வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.