Categories
பல்சுவை

இதெல்லாம் ரொம்ப டூ மச்….. தனுஷின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பள்ளி சிறுவர்கள்….. வைரல் வீடியோ….!!!!

மாணவர்கள் கல்வியை கற்றுக் கொள்ளும் இடமாக மட்டுமில்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் பள்ளிக்கூடங்கள் கற்றுக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் வீட்டு பாடங்களை எழுதுகிறோமே, தேர்வில் வெற்றி பெறுகிறோமே, ஒழுக்கமாக இருக்கணும் என்கின்ற பயம் மாணவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். ஆசிரியர்களின் கம்பு மீது பெற்றோர் மீதும் மிகுந்த அச்சம் தான் அந்த ஒழுக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஆசிரியர்களால் அடிவாங்கி பல பனிஷ்மெண்ட்களை கடந்து வந்தவர்கள் கூட இப்போது அவர்களது ஆசிரியர் மீது எந்த வன்மமும் இருக்காது. ஆனால் இன்று பள்ளிக்கூடங்களில் சூழல் அவ்வாறு உள்ளதா என்றால் இல்லை. மாணவர்களைஆசிரியர்கள் அடித்தாலும் குற்றம், பனிஷ்மெண்ட் கொடுத்தாலும் குற்றம். இதனால் பல ஆசிரியர்களின் எல்லை மீறல் தடுக்கப்பட்டாலும் கூடவே மாணவர்களின் அராஜகம் அதிகரித்துள்ளது.

மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பயந்து வகுப்பறைகள் செல்ல முடியாத நிலை பல அரசு பள்ளிகளில் ஏற்பட்டு வருகிறது. அதுபோன்ற பல நிகழ்வுகளை இணையதளத்தில் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதன்படி புதிய வகையிலான வீடியோ ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதுவும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் குத்தாட்டம் போடுவதும், சினிமா வசனங்களுக்கு ரீல்சும் போட்டு உள்ளனர். அது வகுப்பறை தானா அல்லது ஏதாவது சினிமா சூட்டிங்கா என்ற குழம்பும் அளவுக்கு தெளிவாக ரசனையாக எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் தாய் கிழவி பாடலுக்கு சிறுவர்கள் குத்தாட்ட போடும் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ள இந்த அமைப்பின் நிர்வாகி அமைச்சர் அன்பில் மகேஷை டேக் செய்துள்ளார். விரைவில் அந்த வீடியோ குறித்து முழு விவரம் தெரிய வரும்.

Categories

Tech |