சிக்கன் மிளகு கறி
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
பட்டை – 3
இஞ்சி – 1 துண்டு
மல்லி பொடி – 4 ஸ்பூன்
மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
தக்காளி – 4
கிராம்பு – 4
வெங்காயம் – 4
பூண்டு – 10 பல்
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
கருவேப்பிலை – சிறிது.
செய்முறை
- முதலில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக வெட்டி கொள்ளவும்.
- பூண்டையும் இஞ்சியையும் விழுது போல் அரைத்து எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை மற்றும் கிராம்பு போட்டு தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து மேலும் வதக்கவும்.
- அதனுடன் தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும்.
- வதங்கியபின் கழுவி வைத்துள்ள சிக்கனை போட்டு வத்தல் பொடி, உப்பு, மல்லி பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக கிளறி விடவும்.
- அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடிவிடவும்.
- பின்னர் அது நன்றாக கொதித்து வற்றி வரவும் இறக்கி விடவும். இப்போது சுவை மிகுந்த சிக்கன் மிளகு கறி தயார்