Categories
தேசிய செய்திகள்

“மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று மகனையும் கொல்ல தேடிய கனவர்”… நடந்தது என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாக பள்ளியைச் சேர்ந்த அஜய் குமார் மற்றும் லினி தம்பதியினருக்கு 13 வயதில் மகன் இருக்கிறார். சிவில் இன்ஜினியர் பிரிவில் டெக்னீசியனாக வேலை செய்து வந்த அஜய் குமார் குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசித்து வருகின்றார். இந்த சூழலில் இன்று அதிகாலை திடீரென மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அஜய் குமார் மகனையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் மகன் பின் வாசல் வழியாக தப்பி ஓடி விட்டதால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதுடன் சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டரையும் திறந்துவிட்டு தீ வைத்து இருக்கிறார்.

சில நிமிடங்களில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி சடலமாக கிடந்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி தெரிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தம்பதியினரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் மனைவியை நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்தது மட்டுமல்லாமல் அஜய் குமாரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |