தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பீட்சா 2 திரைப்படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீட்சா 3 உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ள பீட்சா 3 திரைப்படத்தில், அஸ்வின் ஹீரோவாக நடிக்க பவித்ரா மாரிமுத்து ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படத்தை சி.வி குமார் தயாரிக்க காளி வெங்கட், இயக்குனர் கௌரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் = முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பீட்சா 3 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும். இந்த படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.