UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் https://civilservicecoaching.com என்ற இணையதளத்தில் இன்று (அக்டோபர் 7) முதல் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தங்கும் வசதி, உணவு மற்றும் தரமான நூலகம் என அனைத்துமே இலவசம் தான். தகுதியானவர்கள் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். தமிழக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது