தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் பிரபாஸுடன் இணைத்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் அனுஷ்கா துணிச்சலான பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தற்போது 40 வயதை தாண்டிய நடிகை அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் சமீபகாலமாகவே படங்களில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதாவது அந்த வீடியோவில் தன்னுடைய செல்லக்குட்டியான நாய்க்கு சொரிந்து விடுகிறார். இதை அனுஷ்கா ரசிகர்கள் ஷேர் செய்து வைரல் ஆக்குகின்றனர்.
பிரபலங்கள் படங்கள் குறித்து பதிவிட அனுஷ்காவோ நடிகர் கிருஷ்ணராஜூ மறைவுக்கு இரங்கல், ஆயுத பூஜைக்கு வாழ்த்து, லைக்கர் மற்றும் சீதாராமம் படங்களுக்கு வாழ்த்து என சமூக வலைதளங்களில் ஒவ்வொன்றாக பதிவிடுகிறார். இதனால் அனுஷ்கா, மீண்டும் பழைய அனுஷ்காவா வருவாரா என்பது தான் தற்போது ரசிகர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்றும் சில ரசிகர்கள் கூறுகிறார்கள்.
View this post on Instagram