Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு பிறகு திமிராக பேசும் நயன்தாரா…..? புது புது கண்டிஷனால் கொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்….!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வரும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது காதலிக்க தொடங்கிய நயனும், விக்கியும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி கிட்டத்தட்ட 3 மாதங்களைக் கடந்த நிலையிலும் நயனும், விக்கியும் ஹனிமூன் கொண்டாடுவதால் நயன்தாரா நடிக்கும் பல படங்களின் வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இயக்குனர்களிடம் பல கண்டிஷங்களையும் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை யாராவது படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினால் என்னால் இப்போது வர முடியாது உங்களுக்கு அவசரம் என்றால் வேறு யாராவது ஹீரோயினை வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக பேசுகிறாராம். சமீபத்தில் கூட அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா ஒப்பந்தமானார். இந்த படத்தின் ஷூட்டிங்கை இயக்குனர் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என நயன்தாரா கூறிவிட்டாராம். மேலும் அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு 10 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறும் நிலையில், படங்களில் சரிவர வந்து நடித்துக் கொடுக்காதது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |