மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பெருந்தலைவர் காமராஜரும் மக்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறார். நம்ம தலைவர் பொன்மன தலைவன் புரட்சித்தலைவன் சரித்திர நாயகன் அவரும் உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே மாதிரி நம்ம அம்மா உணவகம் கொண்டு வரும்போது உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் நம்ம முதலமைச்சர் சாப்பிட்டார் பாருங்க… இந்தா இருக்காங்க பாருங்க ஊடகங்கள்…
மதுரைக்காரங்களே குசும்புக்காரர்கள்… அதோட நம்ம மீடியாக்கள் ரொம்ப குசும்பு பண்ணுவாங்க, நம்மகிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசிட்டு என்ன சொல்றேன்னு நியூஸ் சொல்லுவாங்க.அதே போல செய்தியாளர்கள் ஐயா ஒரு போட்டோவுக்கு போஸ் குடுங்க.. ஐயா குழந்தைக்கு சோறு ஊட்டுகின்ற மாதிரி ஒரு போஸ் கொடுங்கய்யா…. இது நிகழ்ச்சி நிரலில் இல்லை என அவர்கள் சொல்லுறாங்க.. உடனே நமது முதலமைச்சர்… அப்படி எடுத்து குழந்தைக்கு சோறு ஊட்டுகின்றார்.
போட்டோ எவ்வளவு அழகா வந்திருச்சு பாருங்க அப்படின்னு சொல்லுறாங்க… யப்பா… எல்லா பேப்பர்லையுமே வந்துவிட்டதுப்பா… டிவியில் வந்துச்சு… என பெருமையாக நினைக்கும் அதே நேரத்தில், அடுத்த நிமிஷம் பொசுக்குன்னு போச்சு. அந்த பிள்ளையோட எச்சி முதல்வர் கையில் பட்டுவிட்டதாம். அந்த எச்சி பட்டத பிஷினரி வாட்டர் ஊத்தி கழுவுகிறார். என்னையா நியாயம் ? உங்களுக்கும், மக்களுக்கும் என்னய்யா நியாயம் ? மக்களுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு ? என்ன சமந்தம் ? இதுதான் இன்றைக்கு இந்த ஆட்சியின் ஒரு எடுத்துக்காட்டு நமது முதலமைச்சர் என்ன செய்கிறார் என தெரிவித்தார்.