காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக கூறப்பட்ட இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால் அந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனையானதா என்ற அச்சம் பொது மக்களிடம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து கள்ளச் சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை, இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹரியானாவின் சோனேபட்ட என்ற பகுதியில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் மருத்துவ தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் 66 குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணம் இருந்தது என கூறப்பட்டதை தொடர்ந்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு உள்நாட்டு விசாரணையை தொடங்கியுள்ளது.
காம்பியாவுக்கு தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இருமல் மற்றும் சளி சிரப்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக உலக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மரணங்கள் டயதிலீன் கிளை கோல் அல்லது எத்திலீன் கீளை கோல் என்ற மூலப்பொருள் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் இருந்து வந்தால், அந்த நான்கு சிரப்களின் மாதிரி சி.டி.எஸ்.சி.ஓ. மூலம் சண்டிகரில் உள்ள மருந்து சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகள் வந்ததும் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஹரியானாவின் சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியது, இந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனையில் இல்லை. அவை ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் விரிவான விசாரணை நடந்து கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டதாகவே இருந்தாலும் கூட ஏன் சரியாக நெறிமுறை படுத்தவில்லை, கண்காணிக்கப்படவில்லை என்ற சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.