அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பென்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பி பி எஸ் என அதிகரித்தது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சரிவினால் வெளிநாட்டு பயண செலவு அதிகமாகும் என்ற அபாயம் இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. முந்தைய அமர்வில் ரூபாயின் மதிப்பு 81.88 ஆக இருந்தது இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories