Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

மும்மூர்த்திகளின் தலமான வீரநாராயண பெருமாள் கோவிலில்…. சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கொடிமுடி பகுதியில் மும்மூர்த்திகளின் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியின் ஒன்பது ஒன்பதாவது நாளான விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜை நடைபெறுவதற்கு முன்பாக பெருமாளும் சிவனும் சேர்ந்து வன்னிமா சுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

இந்த வதம் செய்யும் நிகழ்ச்சியை ஸ்ரீதர் பட்டர் மற்றும் பிரபு குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர். இதனை அடுத்து மகுடேஸ்வரரும் வீரநாராயண பெருமாளும் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலரான யுவராஜ் செய்திருந்தார்.

Categories

Tech |