Categories
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்… தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்… பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை…!!!!

பாகிஸ்தானில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பினருடன் அரசு மேற்கொண்டு வந்த அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் கூறியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தினால் அதிருப்தியில் இருந்த அந்த அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா என்னும் இடத்தில் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களது முக்கிய தலைவர்களான ஓமர் காலித் மற்றும் கொரசனி அப்தாப் பார்கி போன்றோர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்ட அறிக்கையின் படி தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கின்றார்கள். அதனால் தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ராணுவத்தினர் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Categories

Tech |