சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி என்னும் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தசரா விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் இதிகாசத்தின் படி ராமர் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு நேரத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அங்கு இராவணனின் உருவ பொம்மையை ஏற்பாடு செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
ஆனால் ராவண வதத்தின் போது ராவணனின் 10 தலைகள் சரியாக எரியவில்லை இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நகராட்சி எழுத்தாளரான ராஜேந்திர யாதவ் என்பவரை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. மேலும் அவருடைய அலட்சியத்தின் காரணமாக நகராட்சி ஆணையத்திற்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக பணியிடை நீக்கத்திற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.